திருப்பூர், ஆக. 13 - திருப்பூர் மாநகராட்சி 27ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சாக்கடை, தார்ச்சாலை, தெரு விளக்கு பிரச்சனையில் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநக ராட்சி இரண்டாவது மண்டல அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 27ஆவது வார்டில் 2ஆவது, 3ஆவது திட்ட குடிநீரை தனித்தனி யாக பிரித்து, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும், பழுதடைந்த சாலைகளைச் செப்பனிட வேண்டும், அம்பேத்கார் காலனி சுகா தார வளாகத்தில் மாதக்கணக்கில் தேங்கியிருக்கும் கழிவுநீரை உட னுக்குடன் அகற்ற வேண்டும், குப் பைகளை உடனுக்குடன் அப்புறப் படுத்துவதுடன், கொசு மருந்து தெளிக் கவும், மாதக்கணக்கில் எரியாமல் இருக்கும் தெரு விளக்குகளைப் பழுது நீக்கவும், பல்லாயிரக்கணக்கான மக்க ளின் போக்குவரத்துக்கு பயன்படும் எம்.எஸ்.நகர் கொங்கு நகர் பிரதான சாலை குண்டும், குழியுமாக இருப் பதால் உடனடியாக புதுப்பித்திடவும், விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக் கடை அமைக்கவும், சொத்து வரி உயர்வை ரத்து செய்யவும், பாதி யில் நிறுத்தப்பட்டிருக்கும் பாப்ப நாயக்கன்பாளையம் ரயில்வே மேம் பாலம் பணியை விரைந்து நிறை வேற்றவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ் வாயன்று மனுக் கொடுக்கும் போராட் டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் அமைந்துள்ள இரண்டாவது மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் திருப் பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.முரு கேசன், மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரராசன், 27ஆவது வார் டுக்கு உட்பட்ட கட்சிக் கிளைச் செயலாளர்கள் இ.பி.ஜெயகிருஷ் ணன், மரியசிசிலியா, சி.கே.கனக ராஜ், தமிழ்வாணன், சண்முகம், மணி, சீனிவாசன் மற்றும் வாலிபர் சங்க மாநகரக்குழு உறுப்பினர் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பெண்கள் உள்பட சுமார் 50 பேர் கலந்து கொண் டனர். மண்டல அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்கம் எழுப்பிய நிலை யில், அலுவலகத்தில் இருந்த கண் காணிப்பு அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக் கைகள் மீது ஒரு வார காலத்தில் நட வடிக்கை எடுப்பதாகவும், தெரு விளக்கு, குடிநீர் கசிவு பிரச்சனைகளில் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதன் அடிப்படை யில் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வா யன்றே வார்டு பகுதியில் பணிகளை மேற்கொண்டனர்.