tamilnadu

img

நூறுநாள் வேலை எங்கே ? ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல், ஜூன் 26- நூறு நாள் வேலைத்திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி மற்றும் காக்காவேரி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங் கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது குடும்ப அடையாள அட்டையுடன் வந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறை யிட்டனர். ஆனால்  சரியான பதில் அளிக்கதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் உடனடியாக வழங்க வேண்டும். வேறு பணிக்கு செல்பவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்தது போல் பதிவு செய்தல், பணிக்கான முழு ஊதியத்தையும் வழங்காமல் மோசடி செய்வது, படிப்பறிவு இல் லாதாவர்களிடம் மிரட்டி வேலை  செய்த நாட்களிலில் பாதி பணம்  மட்டும் வழங்குவது  போன்ற முறை கேடுகளில் ஈடுபடும் இடைதர கர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் டி.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.கே.வெங்கடாச்சலம், தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர், விசைத்
தறி சங்க செயலாளர் எ.ஆறுமுகம், ஜனநாயக மாதர் சங்க தாலுகா செயலாளர் என். ஜெயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க துணை செயலாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;