கோவை, அக்.11- வெளிநாட்டில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை கொழும்புவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத் தினர். அப்போது விமானத்தில் இருந்து வந்த முகமது அக்பர் அலி, அன்சார் அலி, அப்துல் காதர், காந்தர் ஐதர் மற்றும் சாகுல் அமீது ஆகிய 5 பேர் கொண்டு வந்த பார்சல்களை பிரித்து சோதனையிட்டனர். அப்போது அந்த பார்சலில் இந்தியாவில் இறக்கு மதிக்கு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிக ரெட்டு பாக்கெட்டுகள் பண்டல்களாக இருந்தது தெரியவந்தது. இதேபோல், ஹசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகி யோர் கொண்டு வந்த பார்சல்களையும் பிரித்து சோதனை நடத்தியபோது அதிலும் சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்த 7 பேரிடமும் இருந்து மொத்தம் 23 ஆயிரத்து 310 பாக்கெட் சிகரெட்டுகள் பறிமுதல் செய் யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.69 லட்சத்து 93 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக முகமது அக்பர் அலி, அன்சார் அலி, அப்துல் காதர், காந்தர் ஐதர் மற்றும் சாகுல் அமீது ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் ஹசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.