tamilnadu

img

சாலையோரம் குவியல் குவியலாய் வீசப்பட்ட அரசு மருத்துவமனையின் மருந்து, மாத்திரைகள்

மேட்டுப்பாளையம், ஆக.14- மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் சாலை யோரம் கொட்டிக்கிடக்கும் அரசு மருத்துவமனையின் மருந்து, மாத்தி ரைகளால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து சிறுமுகை என்னும் பகுதிக்கு செல்லும் சாலை யோரம் கருப்பராயன் குட்டை என்னுமிடத்தில் குவியல் குவிய லாக மருந்துகள் கொட்டப்பட்டு  கிடப்பதை கண்ட பொதுமக்கள்  அதனை அருகில் சென்று பார்த்த னர். அப்போது வீசப்பட்டு கிடந்த மருந்துகள் அனைத்தும் அரசு மருத் துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டியவை என தெரியவந்தது. இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், காய்ச் சல், ஜலதோசம், இருமல் போன்ற  நோய்களுக்கு வழங்க வேண்டிய மாத்திரை மருந்துகள், இரும்பு சத்து  மாத்திரைகள், கர்ப்பிணி பெண்க ளுக்கு வழங்க வேண்டிய மருந்து கள், வலி நிவாரண மருந்துகள்  என மருந்து அட்டைகள் பாட்டில் கள் என பல லட்சம் மதிப்புடைய மருந்துகள் வீணாக வீசி செல்லப் பட்டுள்ளன. இதில், 20 சதவிகிதம் மருந்து கள் மட்டும் இந்த ஆண்டு காலா வதி ஆக கூடியவை, மற்ற 80 சத விகிதம் மருந்துகள் அனைத்தும் வரும் 2020 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய காலாவதியாகாத மருந்து களாகும். நகரபகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் போதிய அளவில் இல்லை தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளதாக புகார் உள்ள நிலை யில், இங்கு எப்படி இவ்வளவு மருந்து மாத்திரைகள் கொட்டப் பட்டு கிடக்கின்றன என்பது தெரியவில்லை. மருத்துவ கழிவு கள் மற்றும் மருந்து மாத்திரைகள்  சுகாதார சீர்கேடு ஏற்படாத வகை யில் முறைப்படி அப்புறப்படுத்தப் பட வேண்டும் என்ற விதிகள் இருக்க, இவையனைத்தும் குடியி ருப்புகள் நிறைந்த சாலையோரம் வீசி சென்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, அரசு மருத்து வத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இப்பிரச்சனை குறித்து  இதுவரை தெரியாது, விசாரிக்கி றோம் என்றனர். மருந்து மாத்திரை களின் அட்டைகளில் குறிபிட்டுள்ள பேட்ச் எண்ணை வைத்து இவை எந்த அரசு மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது என கண்டறிந்து விடலாம் என்ற நிலையில், ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை காக்க வழங் கப்பட வேண்டிய அரசு மருத்துவ மனை மருத்துகளை வீசி சென்ற வர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டியது அவசியம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்தனர். இதனிடையே மேட்டுப்பாளை யத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரகு மான் என்பவர் இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலை யத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

;