tamilnadu

img

தொடர் திருட்டை தடுக்கக்கோரி சாலை மறியல்

மேட்டுப்பாளையம், ஜன.22- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் தொடர் திருட்டை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.  மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சின்னதொட்டிபாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மை காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பூட்டி கிடக்கும் வீடு மற்றும் கடைகளை உடைத்து பொருட்கள் கொள்ளை யடிப்பது, நடந்து செல்லும் பெண் களின் தங்க சங்கிலியை பறித்து செல்வது, கால்நடைகளை திருடி  செல்வது என பல்வேறு குற்ற சம்ப வங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து காரமடை காவல்நி லையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உள்ளூர் இளைஞர்கள் குழுவாக இணைந்து இரவு நேரங் களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை 3 மணியளவில் காரில்  வந்த ஐந்து பேர் சின்னதொட்டி பாளையம் பகுதியில் பாலகி ருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் பொருட்களை திருடி தங்களது வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தனர். இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் அவர்களை துரத்தியுள்ளனர். இதில் ஐந்து பேரில் ஒருவர்  மட்டும் பிடிப்பட்ட நிலையில்  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட் டார்.  இந்நிலையில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வரும் நிலையில் இது  குறித்து பலமுறை புகார் அளித்தும்  உரிய நடவடிக்கை எடுக்காத  காவல்துறையினரை கண்டித்து  அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளை யம் திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கார மடை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இனி இரவு  பகல் என தொடர்ந்து ரோந்து  வாகனங்கள் மூலம் கண்காணிக் கப்படும், தப்பியோடிய நான்கு கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என உறுதி யளித்ததைத் தொடர்ந்து போராட் டம் கைவிடப்பட்டது. இதைய டுத்து பிடிபட்ட கொள்ளையனி டம் போலீசார் விசாரணை நடத்தி யதில், அன்னூர் பகுதியை சேர்ந்த  பிரகாஷ் என்பது தெரியவந்தது.  மேலும் இவர் பல்வேறு திருட்டு  சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

;