சேலத்தில் 2ஆவது நாளாக பெண்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்,பிப்.18- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து, சேலம் கோட்டை பகுதியில் செவ்வாயன்று இஸ்லாமிய பெண்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளை கைது செய்த சம்பவத்தை கண்டித்து இஸ்லாமிய பெண்கள் சேலம் மாநகர பகுதியில் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் ஜனநாயக ரீதியாக போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந் தைகள் மீது தடியடி நடத்திய காவல்துறை யினரை கண்டித்தும், தடியடி நடத்திய வர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும், மற்றும் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர். போராட்டத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சிபிஎம் சார்பில் மாநகர குழு உறுப்பினர் சுல்தான், பச்சமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசி னர்.