tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக

அவிநாசி, ஜூலை 24- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  அவிநாசி  வட்ட கிளை  13வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் திங்க ளன்று நடைபெற்றது.   இம்மாநாட்டிற்கு வட்டக் கிளை தலைவர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட கிளைச்செயலாளர் ஆர். கருப்பன், வட்ட கிளை பொருளாளர் எஸ்.குகன் ஆகி யோர் அறிக்கையை முன்வைத்தனர்.  இம்மாநாட்டில்ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின்  மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி ஓய்வு பெறும் நாளில்  பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக தமிழக  அரசு ரத்து செய்ய வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு  திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவிநாசி வட்டாரத்தை இரண்டாகப் பிரித்து சேவூரை  தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றி யத்தில் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையை  தனியார் பராமரிப்பை கைவிட்டு அரசே ஏற்று நடத்த  வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை  கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

அவிநாசி வட்ட கிளை தலைவராக பி.ரமேஷ் குமார்,  துணைத் தலைவர்களாக கே.பரமேஸ்வரன், எம். ரமேஷ், பி.பரிமளா, வட்டக் கிளை செயலாளராக ஆர். கருப்பன், இணைச் செயலாளர்களாக எஸ்.சின்ராஜ், வீ.சுமதி, மனோகரன், பொருளாளராக பி.செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எம்.வெங்கிட்டான்,  ஆர்.வினோத்குமார்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மு.சீனிவாசன் நிறைவுரையாற்றினார்.