பெரம்பலூர், நவ.8- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக்குழு நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சக்திவேல் முன் னிலை வகித்தார். துணை செயலாளர் சின்னசாமி வரவேற்றார். மாநில செயலாளர் சாமி நடராஜன், மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, மாவட்ட விவ சாயிகள் பிரச்சனை குறித்தும் எதிர்கால போராட்டங் கள் நடத்துவது குறித்து பேசினார். கூட்டத்தில், மழையால் மாவட்டத்திலுள்ள 73 பொ துப்பணித் துறை ஏரிகளில் இதுவரை 3 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மாவட்ட நிர்வாகம் செய்துள்ள குடிமராமத்துப் பணிகளும் பாதியிலேயே நிற்கிறது. குறிப்பாக வேப்பந்தட்டை வட்டம் கல்லாற் றிலிருந்து வரும் நீர் வரத்து வாய்க்கால் மூலமாக பல ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது வரத்துவாய்க்கால் அனைத்தும் சீர் செய்யப்படாததால் எந்த ஏரியும் நிரம்பவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழு வதும் உள்ள ஏரிகளையும் வரத்து வாய்க்கால்க ளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரே நேரத்தில் அதிக யூரியா தேவைப்படுவதால் போதிய இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 2014 ஆம் ஆண்டே திட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் நிலம் கொடுத்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதை ஜிவிகே குழு மம் தடுப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நில ஆவணங்களை ஜிவிகே குழுமத்திலிருந்து விவசாயிகள் பெயருக்கே மாற்றம் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும். வேப்பந்தட்டை தாலுகா பச்சைமலை சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டம் ஆய்வுப் பணியோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை துவக்க வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் விவ சாயிகளை திரட்டி போரட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பருத்தி கணிசமாக சாகுபடி செய்யப்படுவதால் பருத்தி விவசாயிக ளுக்கு கூடுதல் விலை கிடைக்க பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஜவுளிப்பூங்கா அமைப்ப தாக நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி கள் விநாயகம் கோயிந்தன், ஜெய்சங்கர், சித்தூட் ராமசாமி, கருப்புடையார், பாலசுப்ரமணியன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.