tamilnadu

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

தருமபுரி, நவ.15- அரூர் அருகே, பெரிசாக வுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற் றுச்சுவர் அமைக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், கம் பைநல்லூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிர தான சாலையில், பெரிசா கவுண்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி முக்கிய சாலை யில் உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இதனால், இரவு நேரங் களில் மது பிரியர்கள் மதுக்கூடமாக  பயன்ப டுத்தி வருகின்றனர். மேலும், பள்ளியில் இருந்து வெளியே வரும் மாணவர் கள் சாலையில் வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.  எனவே, சமூக விரோதி கள் அத்துமீறி பள்ளி வளா கத்தில் நுழைவதை தடுக் கவும், மாணவர்களின் பாது காப்பை கருத்தில் கொண் டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும்  மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற் றோர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.