tamilnadu

img

திருநங்கைகளுக்கு நிவாரணம்

சேலம், மே. 8 - சேலத்தில் ரெட்கிராஸ் சொசைட்டி கொடியேற்று விழா வில் திருநங்கையர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டது. ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்ட் அவர் கள் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக ரெட்கிராஸ் தின மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட் டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்  சேலம் மாவட்ட ஆட்சியர்  எஸ்.ஏ.ராமன் தலைமையில் சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரெட்கிராஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான சிறப்பு முகாமில் ரத்த தானம் வழங்கிய 25 ஆசிரியர்களுக்கு சான் றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.  இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் வறு மையில் உள்ள 75 திருநங்கைகளுக்கு  நிவாரணப் பொருட் கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் மதன், ஒய்.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், பிரபாகர், ஹரிஹரன், ஜெய்சந்த்லோடா மற்றும் சேலம் திருநங்கை நலச்சங்க செயலாளர் பாபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;