tamilnadu

img

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை, நவ. 16 -   கோவை, திருப்பூர், நீலகிரி, தரும புரி மாவட்டங்களின் வரைவு வாக்கா ளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் திங்களன்று வெளியிட்டனர். கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை திமுக எம்எல்ஏ நா.கார்த் திக், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்பு  மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வெளியிட்டார். இதில், கோவை மாவட்டத்தில் 29  லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 14 லட்சத்து 68 ஆயிரத்து 722 பேரும்,  பெண்கள் 15 லட்சத்து இரண்டா யிரத்து 142 பேரும், மாற்று பாலினத் தவர்கள் 369 பேரும் இடம் பெற்றுள் ளனர். மேலும், இப்பட்டியலில் தற்போது 15 ஆயிரத்து 165 பேர்  புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட் டுள்ளனர். 24 ஆயிரத்து 727 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் வில் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், அனைத்து கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் இந்த வரைவு  வாக்காளர் பட்டியலை வெளியீட் டார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 3 ஆயிரத்து 842 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 775  பேரும், பெண்கள் 11 லட்சத்து 60  ஆயிரத்து 809 பேரும், மாற்று பாலி னத்தவர்கள் 258 பேரும் உள்ளனர்.  

நீலகிரி

 நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளி யிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 பேர். பெண்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பேர். மாற்று பாலினத்தவர்கள் 12 பேர் இடம்பெற்றுள்னர். இவர்க ளில் 2 ஆயிரத்து 317 பேர் புதிய  வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ள னர். 7 ஆயிரத்து 255 பேர் வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள் ளனர்.  

தருமபுரி

தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு  வாக்காளர் பட்டியலை வெளியிட் டார். இதில், தருமபுரி மாவட்டத்தில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 534 வாக்காளர்கள் உள்ளனர். இதில்  ஆண்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து  332 பேர். பெண்கள் 6 லட்சத்து 08 ஆயிரத்து 064 பேர். மாற்று பாலி னத்தவர்கள் 138 பேர் இடம்பெற் றுள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 608  பேர் புதிய வாக்காளர்களாக சேர்க் கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 127 பேர்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக் கப்பட்டுள்ளனர்.  

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 79 ஆயிரத்து 280 பேர், பெண்கள் 14 லட்சத்து 82 ஆயிரத்து 124 பேர். மாற்று பாலினத்தவர்கள் 164 பேர் உள்ளனர்.  

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீட் டார். இதில் நாமக்கல் மாவட்டத்தில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 883 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 93 ஆயி ரத்து 023 பேரும், பெண்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 720 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 140 பேரும் உள்ளனர்.  

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் கூறுகையில், வரும் நவ.21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். அடுத்த ஒரு  மாத காலம் இந்த பணிகள் நடைபெற  உள்ளன. இதன்பின் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

;