tamilnadu

img

மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத ரயில் நிலையம்

சேலம், செப்.18- ஓமலூர் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னும் திறக்கப்படாமல் உள்ளது.  ஓமலூர் ரயில் நிலையம் வழியாக சேலம், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள்  சேலம், ஈரோடு, மேட்டூர், பெங்களூரு, மும்பை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர். மேலும் 6 பயணிகள் ரயில் 12 முறை நின்று செல்கிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரயில் நிலைய கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டன. ஆனால் கட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் இன்று வரை திறக்கப்படவில்லை.  இதனால், ரயில் நிலைய புதிய கட்டிடம்  பழுதடைந்து, மின் இணைப்புகள் சேதமடைந்து விட்டன. பயணிகளுக்கான அமருமிடம், நிழற் கூடம் போன்றவை இதுவரை அமைக்கப்படாமல் பீடத்துடன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற் போதுள்ள பழைய ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழற்கூடம் இல் லாமல் அவதிப்படுகின்றனர். எனவே புதிய கட்டிடம்  விரைவில் திறக்கப்படவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;