tamilnadu

img

டாஸ்மாக் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி, மே 16 - அவிநாசி அருகே கருவலூர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 7 -ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் சூழல் ஏற்பட்டதால் டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.  இதைத்தொடர்ந்து தமிழக அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி பெற்றதையடுத்து சனி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கருவலூர் ஊராட்சியை சேர்ந்த சிஎஸ்ஐ காலனி,  அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெண் கள், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கோயில்பாளையம் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன் றனர். இதனை அறிந்த அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பெண்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

;