tamilnadu

img

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல்.பிப்.25- ராமாபுரம் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  மல்லசமுத்திரம் ஒன் றியம், ராமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எலச்சி பாளையம், வையப்பமலை, மோர்பாளையம் ஆகிய பகு திகளுக்கு சாலை பிரிந்து செல்கின்றது. இச்சாலையில் தினந்தோறும் இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வரு கின்றது. இப்பகுதியில் மூன்று சாலைகள்  சந்திக்கின்றன. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது பகுதியினரின் பலவருட கோரிக்கையாக உள்ளது. எனவே, பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்த பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.