சர்வதேச குழந்தைகள் தினம்
சேலம், அக்.11- சேலத்தில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாது காப்பு பொது விவாத மேடை வெள்ளியன்று நடை பெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் தாஸ், குழந்தைகளின் இன்றைய சூழ்நிலை, செய்ய வேண்டிய கடமைகள் குறித்து மாநில அமைப்பாளர் ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசவுந்தரி மற்றும் துணைதலைவர் கே.ராஜாத்தி, மகளிர் அமைப்பு, தொழிலாளர் இயக்க நிர்வாகிகள், வழக்க றிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு விவாதித்தனர். இதில் பெண் குழந்தைகள் மீது பாலியல் வன் முறைகள், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வலியுறுத்தினர். மேலும் 181 என்ற பெண் களுக்கான அவசர உதவி எண்ணை பயன்படுத்து மாறும் கேட்டுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரோஸ்லின் மற்றும் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் அலமேலு, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் உலக பெண் குழந்தைகள் பாது காப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மாநகரம் சிந்து இந்து பள்ளியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண் குழந்தைகளிடம் நல்ல தொடுதல் மற்றும் தீய தொடுதல் குறித்து விரிவாக விளக்க மளிக்கப்பட்டது. பொம்மைகளை வைத்து சேலம் ஜெனிஸ் அகாடமி நிறுவனர் கர்லின் எபி விழிப் புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்கேற்ற மாணவிகள், பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக் கப்படும் அநீதிகளை எதிர்த்து உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின்தலைமை ஆசிரியை லதா உள்ளிட்டு ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.