tamilnadu

பசியால் செத்துப்போகும் முன் நிவாரணம் வழங்குக

சிஐடியு கட்டுமானத் தொழிற்சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 20 - கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருப்பவர்கள், அட்டை வைத்திருக்கிறவர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இந்திய கட்டுமான தொழிலா ளர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழுவின் கூட்டம் மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் புதனன்று காணொளி வழியாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.குமார், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் வாயிலாக மாநில அரசிற்கு தெரி வித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கிய கொரோனா ஊரடங்கு 55 நாட்க ளுக்கு மேல் ஆகி உள்ளது. தமிழக  முதலமைச்சர் கட்டுமான தொழிலா ளிகளுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளிகளுக்கும் முதல் தவ ணையாக ஆயிரம் ரூபாயும், இரண் டாவது தவணையாக 500 ரூபாயும், மேலும் கட்டுமான தொழிலாளிகள், ஓட்டுநர்களுக்கு பொதுவிநியோக முறை திட்டத்தின்கீழ் உணவு பொருட்கள் வழங்குவது என அறி விப்பு செய்தார். 

அன்றாடம் வேலை செய்தால் தான் உணவு என்கிற நிலையில்  வாழ்கிற சாதாரண தொழிலாளி களின் வாழ்க்கை தேவைக்கு, பேரிடர் காலமான ஊரடங்கு பிறப் பிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப் பட்ட நிவாரணம் இன்னும் போய் சேரவில்லை என்பது வேதனை அளி க்கிறது. மாவட்டங்களில் சமூக பாது காப்புத் திட்ட உதவி ஆணையர்கள் போதுமான கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் தமிழகம் முழு வதும் லட்சக்கணக்கான தொழிலா ளிகளுக்கு நிவாரணம் சென்றடைய வில்லை என்பதை தமிழ் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.  பசியால் வாடும் தொழிலாளிக ளுக்கு உரிய காலத்தில் நிவார ணமும், உணவுப்பொருளும் வழங்க  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநி லம் முழுவதும் கட்டுமானம் அமைப் புசாரா தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு செய்திருப்பவர்கள், அட்டை வைத்திருக்கிறவர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புதுப்பித்தல் காரணத்தை காட்டி  நிவாரணம் வழங்காமல் இருப்ப தும், அந்த தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் இருப் பதும் நியாயமற்ற செயலாகும். எனவே உடனடியாக நலவாரி யத்தில் பதிவு செய்துள்ள அனைத்து  தொழிலாளர்களுக்கும் உடனடி யாக உதவிகள், நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு துன்ப துயரங்களில் ஆட்பட்டு இருக்கிறார்கள். பசி யோடு போராடிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கிற கொடுமை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்தவில்லை, அரசுத் துறையும் கவனம் செலுத்தவில்லை,  மாறாக பல பகுதிகளிலும் அவர் களைத் தடியடி நடத்தி விரட்டி யடிக்கும் கொடுமை நடத்தப்படுகி றது. எனவே, மாநில அரசாங்கம் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு ரயில் மூலமாகவோ, இதர போக்கு வரத்து வாகனங்கள் மூலமாகவோ உடனடியாக நடவடிக்கை எடுத்து  அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை தீர்மானங்கள் வாயிலாக கட்டுமானத் தொழிலாளர் சம்மே ளனம் (சிஐடியு) மாநில அரசை வலி யுறுத்தியுள்ளது.

;