tamilnadu

img

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கிடுக

செந்தில்குமார் எம்.பி, வலியுறுத்தல்

தருமபுரி, ஜன. 31- மலைவாழ் மக்கள் வசிக் கும் கிராமங்களுக்கு ஒகே னக்கல் குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி  நாடாளுமன்ற  உறுப்பினா் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் வலியுறுத்தி யுள்ளார். தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்புக் குழுக்கூட்டம்  தரு மபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி  எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது.  ஊரக வளா்ச்சி திட்ட இயக்கு நா் க.ஆா்த்தி முன்னிலை வகித்தார். இதில்,  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற் றனா்.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நடை பெற்று வரும் அரசு திட்ட வளா்ச்சிப் பணிகள், நிறைவுற்ற பணிகள், நடப்பு நிதி யாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணி கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின்பு, நாடாளுமன்ற உறுப்பினா் டிஎன்வி.எஸ்.செந்தில்குமார்  செய்தியாளா்களிடம் கூறியதாவது, தரும புரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். ஒகேனக்கல் கூட் டுக் குடிநீா், மாவட்டம் முழுவதும் முழுமை யாக விநியோகிக்கப்பட வேண்டும். குறிப் பாக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக ளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் சென்று  சேர வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டப்படும் தனிநபா் கழிப்பறைகள் பல் வேறு பகுதிகளில் பயன்பாடற்று காணப் படுகின்றன. இரண்டு அல்லது மூன்று தனி நபா் கழிப்பறைகளை இணைத்து பொதுக் கழிப்பறை வளாகமாக அமைத்து தரவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங் கள் மூலம் பராமரிக்கவும் வேண்டும். குறிப்பாக, மாவட்ட மக்களின் சுகாதா ரத்துக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.  மேலும், மாவட்டத்தில் படித்த இளை ஞா்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள், சாலை விரிவாக்கத் திட்டங்களை செயல்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரு மபுரி-மொரப்பூா் ரயில் பாதை இணைப்பு திட்டப் பணிகள் மிக விரையில் தொடங் கும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள நிதி ரயில் பாதை அளவீட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

;