tamilnadu

img

கட்டாய கல்வி திட்டத்தின் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை

பொள்ளாச்சி, ஜூன் 10- தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம்,  தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடு வதைத் தடுக்கக்கோரி மாணவர் களின் கல்வி உரிமைக்கான கூட் டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை, எளிய, நலிவடைந்த பிரிவினருக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக் கீடு வழங்க வேண்டும். இதன்படி கடந்த ஆண்டுகளில் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை பின்பற் றப்படவில்லை எனப் புகார் தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம் என அறிவிக் கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அடுத்து பள்ளிகள் தொடங்கி யுள்ள நிலையில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் நோட்டு, புத்த கங்களுக்கான  கட்டணம் பெறப் படுகிறது. இதனைத்தொடர்ந்து கல்வி கட்டணமும்செலுத்த  நிர்பந்திக்கப்படுகின்றனர். குறிப்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் செயல் படும்  சில தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட னர். இம்மாணவர்களின்பெயர் பட்டியலை பள்ளியின் அறி விப்பு பலகையில் வெளியிட பள்ளி நிர்வாகங்கள் மறுக்கின்றன. இம்மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி மாணவர் களின் கல்வி உரிமைக்கான கூட் டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர்களில் ஒருவரான கே.மகாலிங் கம் தலைமையில் சார் ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது.

;