tamilnadu

img

தேசிய மருத்துவ ஆணையத்தை கண்டித்து தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு, ஜூலை 31- தேசிய மருத்துவ ஆணையம் அமைப் பதை திரும்பப் பெற வலியுறுத்தி புதனன்று தனியார் மருத்துவமனைகள், கிளினிக் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை  நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.  இந்திய மருத்துவ கழகத்தை கலைப் பதை எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிரான தேசிய மருத் துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத் துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று புதனன்று இந்தியா முழு வதும் தனியார் மருத்துவமனைகள், கிளி னிக் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள னர்.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட் டத்தில் 1500 தனியார் மருத்துவமனைகள், கிளினிக் மருத்துவர்கள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற னர்.  இதனால் புறநோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.  ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு வழக் கம்போல் இயங்கின.\

கோவை

கோவை மாவட்டத்தில் இந்திய மருத் துவர் சங்கம் சார்பில் சுமார் 250 தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 2,300 மருத்து வர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் கருப்பு பட்டை அணிந்து, வகுப்புகளை புறக்க ணித்து போராட்டம் நடத்தினர். இதன்பின்  கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டத் திலும் ஈடுபட்டனர்.

;