tamilnadu

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவையில் பிரகாஷ்காரத், து.ராஜா இன்று பிரச்சாரம்

கோவை, ஏப்.13-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியசெயலாளர் து. ராஜா ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என்.புதூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.இதேபோல், சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகேயுள்ள கரும்புக்கடைமைதானத்தில் மாலை 6 மணிக்குநடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுஉறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்த இருபொதுக்கூட்டங்களிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

;