தாராபுரம், ஜூன் 27- தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஆக்கிர மிப்பில் இருந்த பூமிதான நிலத்தை துணை ஆட்சியர் உத்தரவின்பேரில் வரு வாய்த்துறையினர் மீட் டனர். தாராபுரம் தாலுகா ஆலாம்பாளையம் கிராமம் டி.குமாரபாளையத்தில், தமிழ்நாடு பூமி தான வாரி யத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் 10 சென்ட் விவசாய நிலம் தனிநபர் ஆக்கிரமிப் பில் இருந்தது. இது குறித்து டி.குமாரபாளையம் பொதுமக்கள் தாராபுரம் துணை ஆட்சியர் பவன் குமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பூமிதான நிலத்தின் அருகில் நல்லதங்காள் ஓடை புறம்போக்கு உள்ளது. இந்த ஓடை புறம்போக்கையும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் தண்ணீர் வரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த நிலங்களை மீட்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பூமிதான நிலம் ஒரு ஏக்கர் 10 சென்ட் அளவீடு செய்யப்பட்டு கல் நடப் பட்டது. துணை ஆட்சியரின் நடவடிக்கை யால் ரூ.12 லட்சம் மதிப்பிலான பூமிதான நிலம் மீட்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரி கொண்டு ஆய்வு நடத்தி நல்ல தங்காள் ஓடை புறம்போக்கையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.