tamilnadu

தேர்தல் பணியில் குளறுபடியா? ஆளும் கட்சிக்காக சூழ்ச்சியா?

மாவட்ட நிர்வாகத்துக்கு அரசியல் கட்சியினர் கேள்வி

திருப்பூர், டிச. 26 - திருப்பூர் மாவட்டத்தில் வாக் காளர் துணைப் பட்டியல் மற்றும்  வாக்குச்சாவடி முகவர் படிவம்  தராமல் கடைசி வரை இழுத்த டிக்கப்பட்டது. இது உள்ளாட்சி தேர்தல் பணியில் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட குளறுபடியா அல்லது ஆளும் கட்சி யினர் தேவைக்காக செய்யப்பட்ட சூழ்ச்சியா என்று மாவட்ட நிர்வா கத்துக்கு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஊரக உள்ளாட்சி முதல் கட்டத் தேர்தல் வெள்ளியன்று நடை பெற இருக்கும் நிலையில் வாக் காளர் துணைப் பட்டியல், வாக்குச் சாவடி முகவர்களுக்கான சான் றிதழ் படிவங்களை அரசியல் கட்சியினருக்குத் தராமல் திருப்பூர்  மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு வரை இழுத்தடித்தனர். ஊரக உள்ளாட்சி முதல் கட்ட  வாக்குப்பதிவு திருப்பூர் மாவட் டத்தில் ஏழு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது. இந்த  வாக்குப்பதிவுக்கு உரிய வாக் காளர் துணைப் பட்டியலை ஏற் கெனவே அரசியல் கட்சிகள் கேட்டிருந்தனர். ஆனால் அதி காரிகள் தரவில்லை. இத்துடன்  கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர்  நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதும் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் விஜயகார்த்திகேய னிடம் அரசியல் கட்சிகளின் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது, டிசம்பர் 23ஆம்  தேதி இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் கால அட்டவணைப்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு அடுத்த  நாள் 24ஆம் தேதி துணைப் பட்டியல் அனைத்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தரப்படும் என்று ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பதில் கூறினார்.

ஆனால் 24ஆம் தேதி மட்டு மின்றி கடந்த மூன்று நாட்களாக துணைப் பட்டியலை அரசியல் கட்சிகளுக்குத் தரவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் கூறு கையில், வியாழக்கிழமை இரவு வரை வாக்காளர் துணைப் பட்டி யலைக் கேட்டும்கூட அதிகாரிகள்  தரவில்லை. வாக்குச்சாவடி அலுவ லர்களிடம் இருக்கும் என பொறுப்பில்லாமல் பதில் கூறு கின்றனர். ஆளும் கட்சியினருக்கு மட்டும் துணைப் பட்டியலைக் கொடுத்துவிட்டு மற்ற கட்சி களைப் புறக்கணிப்பது போல்  தெரிகிறது. வாக்காளர் பட்டி யலைச் சரிபார்ப்பதற்கு முன் கூட்டியே தர வேண்டும். ஆனால்  வாக்குப்பதிவு தொடங்க இருக்கும்  கடைசி நிமிடம் வரை அரசியல் கட்சிகளுக்கு துணைப் பட்டியல் தராதது கண்டனத்துக்கு உரியது என்றார்.

அதேபோல் வாக்குச்சாவடி யில் முகவர்களாக செயல்பட இருப்போருக்குத் தர வேண்டிய படிவத்தையும் அரசியல் கட்சியி னருக்குத் தரவில்லை. வழக்கமாக வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய ஓரிரு நாளில் இப்படிவம் கொடுக் கப்பட்டு அதில் பிரதான முகவர் கள் கையெழுத்திட்டு தேர்தல் அலுவலர்களிடம் கொடுத்து வாக்குச்சாவடியின் உள்ளே முகவர்கள் சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர். ஆனால் அதுவும் கடைசி நேரம் வரை தரப் படவில்லை. இது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கேட்டபோது, அந்தந்த வாக்குச் சாவடிகளில் தரப்படும் என்று இது வரை நடைமுறையில் இல்லாத படி பதில் கூறுகின்றனர் என்று  கட்சி நிர்வாகிகள் குற்றஞ் சாட்டினர். இது குறித்து கோபால கிருஷ்ணன் கூறுகையில், வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் வாக்குச் சாவடியில் முகவர் படிவம் கொடுப்பதாக இருந் தால் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களின் பிரதான முகவரிடம் எப்படி கையெழுத்துப் பெற்று வாக்குச் சாவடியில் ஒப் படைக்க முடியும்?

இதைப் பற்றி தேர்தல் பார்வை யாளரிடம் புகார் தெரிவித்தால், அவர் நேரடியாக தொடர்பு கொள் ளாமல் உதவியாளர்தான் தொலை பேசியில் பேசுகிறார். அவரும்  இதைப் பற்றி அதிகாரிகளிடம் சொல்கிறோம் என்று மேம்போக் காக பதில் சொல்கின்றனர் என குற்றஞ்சாட்டினார். அத்துடன் மாவட்ட கட்டுப் பாட்டு அறை செயல்படுவது போல் ஒன்றியங்கள் அளவில் கட்டுப்பாட்டு அறை செயல் படும், அதற்குரிய தொடர்பு எண்கள் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் என்று ஆட்சியர்  விஜயகார்த்திகேயன் கூறியிருந் தார். ஆனால் ஒன்றிய அளவி லான கட்டுப்பாட்டு அறை  எண்களும் கடைசி வரை பொது  மக்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை.  இது தேர்தல் பணிகளைச் செய்வதில் உரிய முன்னேற் பாடுகள் இல்லாமல் நடைபெறும் குளறுபடியா அல்லது மாநில அரசு  அதிகாரத்தில் இருக்கும் ஆளும் கட்சியினரின் முறைகேட்டுக்குத் துணை போவதற்காக திட்ட மிட்டுச் செய்யப்படும் சூழ்ச்சியா என்று அரசியல் கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
 

;