உடுமலை, செப். 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றி யக்குழு மற்றும் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டியின் சார்பில் மார்க்சியம் குறித்த அரசியல் வகுப்பு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றி யக்குழு மற்றும் குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் “மார்க்சிய அரசியல் பொருளாதாரம் அறிமுகம்” என்ற தலைப்பில் உடுமலை பாலாஜி மண்டபத்தில் சிறப்பு அர சியல் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடிமங்கலம் ஒன்றிய செய லாளர் என். சசிகலா தலைமை தாங்கினார். வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆறுக்குட்டி பெரியசாமி மார்க்சியம் குறித்து கருத்துரையாற்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.