tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, நவ. 19- நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக வந்த ஜேஎன்யு மாணவர்கள்மீது தில்லி காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களின் விடுதிக் கட்டணம் செங்குத்தாக  உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அமைதியான முறையில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி யாக வந்த ஜேஎன்யு மாணவர்கள் மீது தில்லி  காவல்துறை காட்டுமிராண்டித்தனமான முறை யில் தடியடி நடத்தியுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கொடுங்காயங்களுக்கு ஆளாகி யுள்ளார்கள். ஆண் காவலர்கள், பெண் மாணவி களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். ஜேஎன்யு விடுதி தொடர்பான விதிகளில் மூர்க்கத்தனமான முறையில் திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பதை எதிர்த்தும், விடுதிக் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்துமே மாணவர்கள் இப்பேரணியை நடத்தினர்.

கடந்த மூன்று வாரங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் ஜேஎன்யு மாணவர்களின் பிரச்சனைகளைத் திசை திருப்பும் விதத்தில் ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் துர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உண்மை என்ன? இப்போது தனியே அறையில் தங்கி யிருக்கும் மாணவர் அறை வாடகையாக 20  ரூபாயும், இருவராக தங்கியிருந்தால் அறை  வாடகையாக, தலா 10 ரூபாயும் தந்தால் போதும். இப்போது மாற்றியிருக்கும் விதிகளின்படி ஒவ்வொரு மாணவரும் அறை வாடகை மற்றும்  உணவுவிடுதிக் கட்டணம் என சுமார் மூவாயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் அளித்திட வேண்டும். மேலும் புதிய விதிகளின்படி மாணவர்கள் மின் மற்றும் தண்ணீர் கட்டணங்களையும் தனியே  செலுத்திட வேண்டும். மேலும் அறையைத் துப்புரவு செய்கிறவர்களுக்கு எனத் தனியே  கட்டணம் செலுத்திட வேண்டும். இவையனை த்தும் இப்போதுள்ள 3,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக அதிகரித்திடும். இது தவிர ஒவ்வோராண்டும் விடுதிக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படும் விதத்தில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஜேஎன்யு நிர்வாகத்தின் சொந்த அறிக்கையின்படியே, படித்திடும் மாணவர்களில் 40 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் ஓராண்டிற்கு 1,44,000 ரூபாய்க்கும் குறைவாகும். இந்நிலையில் இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வின் உண்மையான பொருள் என்ன வெனில், இப்போது படிக்கின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பைத் தொடர முடியாது கைவிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பும் அவலநிலையையே உருவாக்கிடும்.

ஜேஎன்யுவில் உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டண உயர்வு ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாவின் வரைவு புதிய தேசியக் கல்விக் கொள்கையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். இவர்களின் புதிய கல்விக் கொள்கையானது, பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கடன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிறது. கடன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு என்பதன்  பொருள், கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இது ஒன்றும்  ஜேஎன்யு-வில் மட்டும் நடந்திடவில்லை. நாட்டிலுள்ள ஐஐடி நிறுவனங்கள், உத்தர்காண்டில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரி ஆகியவற்றிலும் இவ்வாறு கட்டணங்கள் அதீத மாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய கட்டண உயர்வுகள், தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாண வர்கள் உயர்கல்வி பெறுவதை சாத்திய மில்லாததாக மாற்றிவிடும்.

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கட்டளை களுக்கிணங்க ஜேஎன்யு துணை வேந்தர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மாணவர் களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் மீது அனைத்துவிதமான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். பல்கலைக் கழக வளாகத்தை போலீ சாரின் கண்டோன்மென்ட்டாக மாற்றியமைத் திருக்கிறார். மாணவர் இயக்கத்தின் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜேஎன்யு பிரச்சனையில் நீடிக்கும் முட்டுக்கட்டையைத் தீர்ப்பதற்காக மூவர் குழு ஒன்றை நியமித் திருக்கிறது. அதீதமாக உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டணம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும், பல்கலைக் கழகத்தின் இன்றைய அவல நிலைக்குக் காரணமான அதிகாரிகளுக்கு எதி ராக தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கோரியுள்ளது.  எம்.ஜகதீஷ் குமார் போன்ற பேர்வழி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக தொடர  எவ்வித உரிமையும் கிடையாது. நேற்றைய தினம் மாணவர்கள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும்  உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது.   (ந.நி.)

;