tamilnadu

img

கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கோவை, ஜூலை 21- கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித் தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை யடுத்து செய்தியாளர்களிடம் பேசியசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:  கோவையில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனா பாதித்த 1609 பேர் குண மடைந்துள்ளனர்.  806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 69 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது.  இந்நிலையில், கோவையில் நோய் தொற்றை கண்டறிய மேலும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு நாள்  ஒன்றுக்கு 4 ஆயிரம் வரை கொரோனா  பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும், கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரத்து 650 படுக்கை வசதிகள் உள்ளது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மேலும் 500 படுக்கைகள் அதிகரிக்க ஏற்பாடு  நடைபெற்று வருகிறது. இதற்கி டையே கோவையிலும் பிளாஸ்மா  சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கொரோனா  நோயாளிகளுக்கு அளிக்கப்படும்  சித்தா மருத்துவத்தின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க இதர நோய் களால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை அதிகமாக இருப்பதே கார ணம். இதனால் மக்கள் பயப்பட  வேண்டாம். முன்னெச்சரிக்கை உடன்  இருக்க வேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்தார். இதையடுத்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகை யில், கோவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விமானம் மூலம் கோவை வருபவர்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோ தனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;