tamilnadu

img

மழை நீருடன் சாக்கடை நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

அவிநாசி, ஏப்.20-அவிநாசி பேரூராட்சி, முத்து செட்டிபாளையத்தில் வெள்ளியன்று பெய்த மழையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளனர்கள். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 16 வது வார்டு முத்து செட்டிபாளையத்தில் 80க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து நிலையின் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி சீரமைத்து கொடுக்க வேண்டும். மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் சரிசெய்து கொடுக்க வேண்டுமென பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பேரூராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்துள்ளோம். 2018ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் வெள்ளியன்று மாலை பெய்த மழையில் வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் புகுந்துவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் கோடை காலத்திலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. பருவமழை காலத்தில் மிகவும் கடுமையாக பாதிப்பு ஏற்படும். எனவே, சாக்கடை கால்வாயை சீரமைத்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

;