tamilnadu

img

குப்பை கிடங்கை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

நாமக்கல், ஏப்.19-திருச்செங்கோடு அருகே, அணிமூரில் உள்ள குப்பை கிடங்கைஅகற்ற வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றிய பகுதியை சேர்ந்த அணிமூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நகராட்சி குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறைஅதிகாரிகளிடம் மனு அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அணிமூர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனுவும் அளித்தனர்.


இந்நிலையில் திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில் நகராட்சி குப்பை கிடங்கை அகற்றவலியுறுத்தி வியாழனன்று ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி ஆட்சியர் மணிராஜ், திருச்செங்கோடு துணை காவல் காண்கணிப்பளர் சண்முகம், திருச்செங்கோடு காவல் ஆய்வாலர் ஆரோக்கியராஜ் மற்றும் காவல்துறையினர், அதிகாரிகள் அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் சொன்னபடி நடக்கவில்லை என்பதாலும், குப்பை கிடங்கை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுபோம் என உறுதியாக தெரிவித்து விட்டனர்.இதுகுறித்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பலருக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது. இதனை அகற்றக்கோரிபலமுறை போராட்டங்களை நடத்தியும், பல இடங்களில் மனுகொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பலர் ஊரை காலி செய்து சென்று விட்டனர். எனவே எங்களுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

;