நாமக்கல், ஜூலை 21- அரசு ஊழியர் போல் கால முறை ஊதியம் குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டன. அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 3 வது மாநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தோழர் கே.கருணா கரன் நினைவரங்கில் ஞாயிறன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கண்ணகி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத்தலை வர் ஆர். காந்திமதி வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர்கள் ந.வேலுசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி சிறப்புரை யாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி, பொருளாளர் எம்.பூங்கொடி ஆகி யோர் அறிக்கையை முன்வைத்து பேசினார்.
தீர்மானங்கள்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்கள் போல கால முறை ஊதியம் குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,500 வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக் கும் திட்டத்தை கைவிட வேண் டும். 5 வருட பணி முடித்த உத வியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பேறுகால மருத்துவ விடுப்பு 9 மாதமாக வழங்க வேண்டும். எல்கேஜி. யுகேஜி பணிமூப்பு அடிப்படை யில் அங்கன்வாடி ஊழியர்களே நடத்த அனுமதிக்க வேண்டும். பதவி உயர்வில் சென்ற மேற் பார்வையாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கு தனியாக மகளிர் பேருந்து விட வேண்டும். நாமக்கல் ராசி புரம் நகராட்சியில் செயல்படும் மையங்கள் அந்தந்த ஊராட் சியுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக பி.கண்ணகி, செயலாளராக எல்.ஜெயக்கொடி, பொருளாளராக எம்.பூங்கொடி, துணை தலைவர்களாக எம்.சுமதி, பி.பாண்டிமாதேவி, காந்திமதி, கே.ஜெயமணி, குர்ஷித், துணை செயலாளர்களாக பி.கலா, சரஸ்வதி, எஸ்.நாஜீரா பிரேமா, லலிதா உள்ளிட்ட 32 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டன. முடிவில் உதவி செயலாளர் பி.கலா நன்றி கூறினார்.