திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் - கைது
கோவை, டிச. 13 – மதரீதியாக மக்களை பிரிக்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டத் தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி யினர் கோவையில் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசு புதியகுடியு ரிமை சட்டம் நிறைவேற்றியதை கண்டித்து, திமுக இளைஞரணி சார் பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை டாடா பாத்தில், மாநகர் மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகி யோர் தலைமையில், “திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்ட நகலினை கிழித்தெறியும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட் டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞர ணியினர் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்ன சட்ட நகலை கிழத்தெரியும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொ டர்ந்து காவல்துறையினர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நந் தக்குமார், குப்புசாமி, உமா மகேஸ் வரி, கழக செயலாளர் கோவை லோகு, பகுதி கழக பொறுப்பாளர் கள் சேதுராமன் உள்ளிட்ட அனை வரையும் கைது செய்தனர்.