tamilnadu

நீலகிரி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

நீலகிரியில் பாலைவன வெட்டிகிளிகள் தாக்குதல் இல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

நீலகிரி, மே 29- நீலகிரி மாவட்டத்தில் பாலைவன வெட்டி கிளிகள் தாக்குதல் இல்லை என்றும், விவசாயிகள் அனைவரும் அதன் பாதிப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது, பாகிஸ் தானில் இருந்து லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்த லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுகிளிகள், இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிப்புகளை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில் பயிர்களை சேதப் படுத்தும் இவ்வெட்டுகிளிகள் நீலகிரி மாவட்டத் தில் உதகை வட்டாரத்திற்குட்பட்ட காந்தள் பகுதி யில் உள்ளதாக வதந்திகள் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தோட்டக்கலை இணை இயக்குநர் தலைமையில் வெட்டுகிளிகள் தொடர்பான கள ஆய்வுகள் நடைபெற உத்தரவிடப்பட்டது.  அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கள  ஆய்வில் நிலகிரி மாவட்டத்தில் லோகஸ்ட் வெட்டு கிளியின் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப் பட்டது. மேலும் பிடிப்பட்ட வெட்டுகிளி தோட்டங் களில் பொதுவாக காணப்படும் சிறு கொம்பு வெட்டு கிளி என்றும், இந்த பூச்சியினால் பெரும் பாதிப்பு ஏற் படாது என்றும் விஞ்ஞானிகள் குழுவால் உறுதி செய்யப்பட்டது. எனவே, விவசாயிகள் யாரும் பயப் பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி தொடக்கம்

திருப்பூர், மே 29 – திருப்பூரில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அமைப்ப தற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரு கிறது. திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல் லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், மாநில அரசும் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்த அரசு மருத் துவக் கல்லூரி அமைய உள்ளது. இங்கு 11.28 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. தற்போது, இக்கல்லூரி கட்டிடம் அமைக்கப்படு வதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இந்த மருத் துவக் கல்லூரிக்கு, மத்திய அரசு ரூ.195 கோடியும், தமிழக அரசு ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடு செய்துள் ளன.