tamilnadu

img

தனியார் பார்சல் நிறுவனத்தில் ஓட்டுநர் மர்ம மரணம் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

இளம்பிள்ளை, டிச.27- மகுடஞ்சாவடி அருகே தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததையடுத்து அவரது உறவினர்கள் முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  . சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூர் மேட்டு முனியப்பன் கோவில் பகுதி அருகே தனியார் (safeducafe)  பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (50)  என்பவர் லாரி ஓட்டுநராக 6 மாதமாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஏற் கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு  மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் வெள்ளியன்று  வழக்கம்போல்  பணிக்கு சென்ற நிலையில் காலை சுமார் 8  மணியளவில் நிறுவனத்தின் நுழைவாயில் எதிராக  உள்ள சாலையோரம் வெங்கடா சலம் சடலமாக கிடந்தார். இதையறிந்த  அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து  குடும்பத்தினரும், உறவி னர்கள் மற்றும் உடன் பணிபுரியும் தொழி லாளர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற் பட்டவர்கள் நிறுவனத்தின் முன் திரண் டனர். இதனை அறிந்த கம்பெனி நிர்வா கத்தினர் தலைமறைவாகிவிட்டார்.  மேலும் அங்கு வேலைபார்க்கும் நூற்றுக்கு  மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை வெளியில் செல்லாத அளவுக்கு ஒரே இடத்தில் அமர வைக்கப் பட்டு இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் மற்றும் எஸ்ஐ சரண்யா, சங்ககிரி வாட்டாசியர் பாலாஜி, மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் சித்ரா உள்ளிட்டோர்  சம்பவ இடம் சென்று  விசாரணை செய்தனர்.   மேலும் மர்மமான முறையில் இறந்த  வெங்கடாசலம் உறவினர்கள் கூறுகையில்,  வேலைக்கு வந்தவரை அடித்து கொலை  செய்து வெளியே போட்டதாக தெரிவித் தனர். மீண்டும் உடலை நிறுவனத்திற்கு உள்ளே கொண்டு சென்று அங்குள்ள அலுவலக அறையில் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உறவினர்கள், வெங்கடாசலம் மரணத் திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில், வெங்கடாசலம் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மற்றொரு லாரி மோதியதில் அடி பட்டு இறந்ததாக தெரிய வந்தது. இறந்த  வெங்கடாசலத்தின் உடலை வெளியில்  கொண்டு வந்து போட்டவர்கள் யார் என்று விசாரணை செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு  நிர்வாகத்தினர் வராததால் காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை  4மணி வரை நீடித்தது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை செய்து குற்றவாளிகள்  மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிடப்பட்டு வெங்க டாசலத்தின் உடலை பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. 

;