tamilnadu

img

பணி நியமனத்தில் அமைச்சர் முறைகேடு துப்புரவு தொழிலாளர்கள் ஆவேசம்- ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

 கோவை, மார்ச் 9 –  துப்புரவுத் தொழிலாளர் பணி நியமனத்தில் அமைச்சர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக் கணக்கான ஒப்பந்த துப்புரவுத்  தொழிலாளர்கள் முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர  தொழிலாளர்களும், 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவுத்  தொழிலாளர்களும் பத்தாண்டுக ளுக்கு மேலாக பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 321  நிரந்தர துப்புரவு பணியாளர் களை நியமிக்க அறிவிப்பை வெளி யிட்டது. இதனையடுத்து நடை பெற்ற நேர்காணலுக்கு பட்டப்ப டிப்பு முடித்தவர்கள் உட்பட  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்று வேலையின்மையின் தீவிரத்தை உணர்த்தினர். இந்நி லையில் கோவை மாநகராட்சி யில் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியில் ஈடு பட்டு வருவதால் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் கோரிக்கை வைத்து போராடி வந்தது.  ஆனால், கோவை மாநகராட்சி இதனை கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கையே கடை பிடித்தது. இதனையடுத்து சிஐடியு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. நீதிமன்றமும் கோரிக்கையின் நியாயம் உணர்ந்து ஒப்பந்த பணி யாளர்களுக்கு அனுபவ அடிப்ப டையில் முன்னுரிமை அளிக்க  வேண்டும் என கோவை மாநக ராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தொழிற்சங்கங்களின் கோரிக்கை, நீதிமன்ற அறிவு றுத்தல் எதையும் கணக்கில் கொள்ளாமல் கடந்த இருதினங் களுக்கு முன்பு கோவை மாநக ராட்சியில் பணியாற்ற  310 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலு மணி வழங்கினார். இதில் முது கலை பட்டம் பெற்றவர்களுக்கும் துப்புரவு பணி நியமனம் வழங்கப் பட்டது. இது பல ஆண்டுகாலம்  ஒப்பந்த முறையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யது.  இதனையடுத்து கோவை மாநகராட்சியில் உள்ள நூறு  வார்டுகளிலும் பணிகளை புறக்க ணித்து திங்களன்று கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறு கையில், கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களின் பணி நியமனத்தில் பெரும் ஊழல்  முறைகேடுகள் நடைபெற்றுள் ளது. பல ஆண்டுகளாக பணி யாற்றி வருபவர்களுக்கு முன்னு ரிமை தராமல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் தொகு திக்கு உட்பட்ட 310 பேர்களுக்கு துப்புரவு பணியாளர் பணி நிய மன ஆணை வழங்கப்பட்டுள் ளது. இதில் அனுபவம் இல்லாதவர் களிடம் மூன்று லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியுள்ளனர். அமைச்சர் எஸ்பி.வேலுமணி இந்த புதிய பணி நியமன ஆணை வழங்கியதன் மூலம் தங்களுக்கு துரோகம் விளைவித்து விட்டார். எனவே, நியாயம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்றனர். இதனையடுத்து அம்பேத்கர் தூய்மை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்வம் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் கோரிக்கைகள் குறித்து முறை யிட்டனர். இந்நிலையில் இதுதொ டர்பாக மாநகராட்சி அதிகாரி களிடம் உரிய விளக்கத்தை கேட்ட றிந்து, உரிய தலையீட்டை செய்வ தாக உறுதியளித்ததால் அனைவ ரும் கலைந்து சென்றனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துப்புரவுத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.