tamilnadu

img

துப்பாக்கி கத்தியுடன் வங்கியில் நுழைந்து ஊழியர்களை தாக்கியவர் கைது

கோவையில் கனரா வங்கி கிளையில் கடன் தர மறுத்ததால் துப்பாக்கி கத்தியுடன் வங்கியில் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வங்கி ஊழியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  
கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கனரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வெற்றிவேலன் என்பவருக்கு லோன் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர், 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், லோன் கிடைக்க காலம் தாழ்த்தப்பட்டதால் வெற்றி வேலன்  ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில், வங்கியில்  இடைத்தரகர் குணாளன், தலைமை மேலாளர் சந்திரசேகர் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த  வெற்றிவேலன் அவரை தாக்க தொடங்கினார். தாக்குதலைத் தடுக்க முனைந்த மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 
இச்சம்பவம் குறித்து கனரா வங்கியின் மேலாளர் சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதைத்தொடர்ந்து வெற்றி வேலனை காவல் துறையினர் கைது செய்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இடைத்தரகர் குணாளனிடமும் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.