tamilnadu

சோலையாறு டேம் மீன்களை அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பதை உறுதி செய்திடுக சிஐடியு

பொள்ளாச்சி, ஆக. 24-  வால்பாறைப் பகுதியில் சோலை யாறு டேம் மீன்களை அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வால்பாறை தேயி லைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐ டியு) கோவை மாவட்டச் செயலாளர் பி.பரமசிவம் குறிப்பிடுகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சோலையாறு அணைப் பகுதிகளில் டேம் மீன்கள் பிடிக்கப்பட்டு அரசு நிர்ணயம் செய் ததை விட இருமடங்கு லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.அதா வது அரசு அறிவுறுத்தலின்டி குத்தகை தாரர்கள் ஒரு கிலோ மீனை ரூ. 110 க்கு டோக்கன் பெற்றுக்கொண்டு விற் பனை செய்ய வேண்டும்.

ஆனால் சமீப காலமாக ஒரு கிலோ மீன்  ரூ.220 க்கு விற்பனை செய்யப்படுகி றது. இந்நிலையில், இதனைக் கண் காணிக்க வேண்டிய தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் விற்பனை யாளர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் தோட் டத்தொழிலாளர்களும், ஏழை எளிய மக்களும் இருமடங்கு தொகையை செலவு செய்து மீன்களை வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. எனவே தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின்  உயர் அதிகாரிகள் கண்கா ணிப்பாளர்களை நியமித்து விற்பனை விலை மற்றும் டோக்கன் முறைகளைக் கண்காணிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;