tamilnadu

img

கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தைகள் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம், மார்ச் 7- ஊருக்குள் நுழைந்து விவசாயி கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை தொடர்ச்சியாக கொன்று வரும் சிறுத்தைகளை உடனடியாக பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மேட்டுப்பாளையத் தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள சிறுமுகை பகுதி யில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத் தைகள் நடமாட்டம் அதிகரித்து வரு கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்கலும் காட்டை விட்டு வெளி யேறும் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் கட்டி வைக்கபட்டிருக்கும் ஆடு மற்றும் மாடுகளை கொன்று வேட்டையாடி வருகின்றன. இத னால் சிறுமுகை சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப் பாக, வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தைகளை பிடிக்க சிறுமுகையில் உள்ள பெரிய தோட்டம், கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண் டுகள் வைத்தும் சிறுத்தைகள் அத னுள் சிக்காமல் தொடர்ந்து ஆடு, மாடுகளை கொன்று வருகிறது. ஏற்கனவே யானை, காட்டுப் பன்றி, மான், மயில் போன்ற வன உயிரினங்களால் விவசாய விளை பொருட்கள் அழிக்கப்பட்டு வரும்  நிலையில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளும் கொல்லப்பட்டு வருவதால் பெரும் இழப்பிலும், அச் சத்திலும் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சனியன்று சிறு முகையில் விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் திரளாக கலந்து கொண்டு, வனவிலங்குகள் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வு காண வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

;