tamilnadu

img

லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், ஏப். 23-மதுரை லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.பெண்ணுரிமைப் போராளி மதுரை லீலாவதி நினைவு தினம் செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாநகர வடக்கு குழு சார்பில் சொர்ணபுரிகிளையில் அனுசரிக்கப்பட்டது. இதில் தியாகி லீலாவதி படத்திற்கு மாலை அணிவித்து பெண்களுக்கு எதிராக அரங்கேறும் அவலங்களுக்கு எதிராக போராடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.வைரமணி, வடக்கு மாநகர தலைவர் காவேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்இதேபோல், நங்கவள்ளி ஒன்றியம் பனங்காட்டூர்கிளையில் வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டதுணை தலைவர் ராஜாத்தி, ஒன்றிய செயலாளர் கவிதா, கிளைசெயலாளர் மகேஸ்வரி, உமாதேவி, மங்கையர்கரசி,நரசம்மாள், மல்லிகா, சரசு, ராமாயி, பிரீத்திலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;