tamilnadu

img

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

 பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

இளம்பிள்ளை, டிச.18- சேலம் மாவட்டம், ஆட்டையாம் பட்டி பகுதியில் உள்ள குப்பை கிடங் கால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பள்ளிக்கு மாணவர்களை அனுப் பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சேலம் மாவட்டம், ஆட்டையாம் பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்களை ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் மற்றும்  தானகுட்டிபாளையம் பகுதியில் உள்ள மைதான பகுதியில்  கொட்டி  வந்தனர். இந்நிலையில் தானகுட்டி பாளையம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக் கின்றன. மேலும் இதனை அடிக்கடி எரிக்கப்படுவதால் இப்பகுதியில் மிக  அருகாமையில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மற்றும் குடி யிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் பல்வேறு தொற்று  நோய் பரவி வருவதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை  புகார் மனு அளித்தனர். ஆனால்  இப்புகார் குறித்து எவ்வித நடவ டிக்கை எடுக்கப்படவில்லை.  இதனால் பேரூராட்சி நிர்வாகத்தை  கண்டித்து   கடந்த வெள்ளிக்கிழமை  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட முயற்சித்தனர்.  இதையறிந்து அங்கு வந்த அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து  சென்றனர். ஆனால், இதன் பின்னரும் தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதால் ஆவேமடைந்த பொதுமக்கள் செவ் வாயன்று அங்குள்ள ஒன்றிய துவக் கப் பள்ளியில் பயின்று வரும்  தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனை  அறிந்த வட்டார கல்வி அலுவலர் மாதவராஜ் பேரூராட்சி நிர்வா கத்திடம் புகார் தெரிவித்தார்.  மேலும் இதுகுறித்து தகவ லறிந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் நேரில் வந்து பொதுமக்களிடம் குப்பை களை கொட்டுவதால் ஏற்படும் பிரச்ச னைகளை கேட்டறிந்தார்.குழந் தைகள் மற்றும்  பொதுமக்கள் நலன்  கருதி இப்பிரச்சனையை விரைவில்  முடிக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை வைத்தார். அப்போது ஆட்டையாம்பட்டி பேரூ ராட்சி  செயல்அலுவலர் சார்லஸ், சேலம் தெற்கு வட்டாட்சியர் ஆர்த்தி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் முன்னாள் தலைவர் முருகபிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் அப்பகுதி யில் உள்ள குப்பைகள் முழுவதும் அகற்றிவிட்டு வளம் மீட்பு பூங்கா  பகுதி யில்  உரம் தயாரிக்கும் நிறுவனம் அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. 

;