திருப்பூர், நவ. 7 – திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டுக்கு உட்பட்ட அணைப் பாளையம் பகுதியில் சுகாதார சீர் கேடு பிரச்சனைக்குத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கட்சியினர் முதலா வது மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அந்தப்புகா ரின் அடிப்படையில் தொடர் பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்ட னர். திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டு அணைப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் அருகில், பாலத்தின் கட்டுமானப் பணிக ளுக்காக கட்டப்பட்ட பெரிய தொட்டிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இது கொசுக்கள் உற் பத்தி மையமாக மாறி அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதா ரக் கேட்டினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே கொட்டப் படும் குப்பையும் அப்புறப்படுத் தப்படாமல் குவிந்து உள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும்நெடுஞ்சாலைத் துறை யினரின் அலட்சியத்தால் இப் பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக் கியிருப்பதுடன், இப்பகுதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட மக்கள் பலரும் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு வருகின் றனர். இப்பிரச்சனையில் மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக கவனித்து உரிய தூய்மை நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளை யம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பி ரமணியத்திடமும் முறையிட்ட னர். குறிப்பாக நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சனை இருந்து வரு கிறது. பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதைய டுத்து நவம்பர் 7ஆம் தேதி வியா ழனன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி முதலா வது மண்டல அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் இதை கவனப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாநக ராட்சி ஊழியர்கள் அணைப்பா ளையம் பகுதிக்குச் சென்று பாலம் கட்டுமானத்திற்காக ஏற்படுத்தப் பட்ட தொட்டியில் துளையிட்டு அதில் தேங்கிநின்ற கழிவுநீரை அகற்றினர். அத்துடன் அங்கு தேங்கியிருந்த குப்பையையும் அகற்றி தூய்மைப்பணி மேற் கொண்டனர்.