tamilnadu

நீதிபதி, தலைமை காவலருக்கு கொரோனா தொற்று- கோவையில் நீதிமன்றம், காவல்நிலையம் மூடல்

கோவை, ஜூலை 8- கோவையில் ஒருங்கிணைந்த நீதி மன்ற நீதிபதி மற்றும் போத்தனூர் காவல் நிலைய தலைமை பெண் காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நீதி மன்றம் மற்றும் காவல்நிலையம் தற்கா லிகமாக மூடப்பட்டது. கோவை போத்தனூர் காவல் நிலை யத்தில் பணியாற்றிய மூன்று காவலர் களுக்கு கொரோனா தொற்று ஏற் பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி காவல் நிலையம் மூடப் பட்டது. இதன்பின் 18 நாட்கள் கழித்து மூடப்பட்ட காவல் நிலை யம் மீண்டும் திறக்கபட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா விதி முறைகளை கடைபிடித்து செயல்பட்டு வந்த காவல் நிலையத்தில், தற்போது ஒரு பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட் டுள்ளது. இதனால் காவல் நிலையம் தற்காலிகமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு  பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறி வுறுத்தபட்டுள்ளனர். நீதிபதிக்கு கொரோனா கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற  நீதிபதி ஒருவருக்கும் செவ்வாயன்று கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் தற்காலிகமாக நீதிமன்ற வளாகம் மூடப்பட்டு வரு வாய்த் துறையினரால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு பணியாற்றிய அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர்.  டாஸ்மாக் ஊழியருக்கு தொற்று இதேபோல், கோவை வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை  விற்பனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டது. இதனையடுத்து கடையின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர்.

அதேநேரம், இக் கடையில் மது வாங்கி சென்ற மதுப் பிரியர்கள் பெரும் கலகத்திற்குள்ளாகி உள்ளனர். ஒரே நாளில் 88பேர் பாதிப்பு  மேலும், கோவை மரக்கடை அருகே உள்ள கே.எலக்ட்ரானிக் சோன் கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது.  இதில் புதனன்று 10 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது. இதனை யடுத்து அனைவரும் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.  மேலும் புதனன்று ஒரு  நாளில் மட்டும் 88பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண் ணிக்கை தற்போது 900ஐ தொட்டுள்ள நிலையில்,  அடுத்தடுத்து மேலும் கொரோனா பாதிப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற் பட்டுள்ளது.

;