tamilnadu

img

ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க அரசு தயாரா?

ஸ் மார்ட் சிட்டி திட்டத்தில் குளத்தை அழகு படுத்துகி றோம் என்கிற பெயரில் உக்கடம் பெரிய குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  உக்கடம் பெரியகுளம் சுமார் 327 ஏக்கர் பரப்பு கொண்டதாகும். இக் குளத்தின் மொத்த கரை 5.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. பெரிய குளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள  1.20 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கரைப்பகுதியாகும். தற் போது உக்கடம் பெரியகுளத்தின் மீத முள்ள சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு மேம்படுத்தி, நடைபாதை, சைக்கிள் பாதை, ஸ்மார்ட்பெஞ்ச், பூங்கா, பொழுதுபோக்கு வசதிகள் ஏற் படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.  கோவை மாநாகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், குளங்கள் மேம்பாட் டுக்கு, ரூ.475 கோடி மதிப்பில் திட்டங் கள் போடப்பட்டுள்ளது. இதில் உக் கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடிக்கும், வாலாங்குளத்தில் ரூ.48.14 கோடிக்கும் பணிகள் மேற் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட சாலைகள் சீரமைக்காதது, மாநகரத் தின் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமல் உள்ள நிலையில் குளங் களை அழகு படுத்துகிறோம் என்கிற பெயரில் ரூ.500 கோடி ஒதுக்கியுள் ளது. இது ஊழலுக்கான நடவடிக்கை என பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்து வருகிறது. 

பாஸ் சாலையில் உள்ள பெரிய குளத்தின் கரைப்பகுதி உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு அடி உயரம் இருந்த கரைகள், பொக் லைன் இயந்திரம் மூலம் தோண் டப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 மீட்டர் தொலைவுக்கு  கரைகள் முற்றிலும் குறைக்கப்பட் டுள்ளன.  100 மீட்டர் தொலைவில் நடைபாதை, சைக்கிள் பாதை, இருக்கை வசதி போன்றவை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  குறிப்பாக ஸ்மார்ட்சிட்டி திட்டத் தின்கீழ் குடிநீர் விநியோகம், எல்இடி மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங் கிணைந்த பேருந்து நிலையம், வ.உ.சி பூங்கா விரிவாக்கம் போன்ற திட்டங் கள் அறிவிக்கப்பட்ட போதும், இதில் எல்லாம் கவனம் செலுத்தாத மாநக ராட்சி, குளக்கரை அலங்காரத்தில் மட்டும ஆர்வம் காட்டுவது ஏன் என் கிற கேள்வி இதுபோன்ற விமர்சனங் கள் எழுந்து வருகிறது. மேலும், நீர் நிலை ஆதாரத்தை மேம்படுத்து வதற்கு பதிலாக அழகுபடுத்தும் பணிக் காக இவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுப்பது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.  இந்நிலையில் குளத்தின் தண்ணீர் இருந்தால் பணியாற்ற முடியவில்லை என்பதற்காக குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கடந்த நான்கு நாட்களாக கோவையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை யில் உள்ள குளங்கள் ஒவ்வொன்றாக நிறைந்து வருகிறது. ஆனால் பெரிய குளம் மட்டும் நிறையவில்லை.  இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், எந்த குளம் வற்றினாலும்  இந்த குளம் வற்றாது. இதனால் இப் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கும். தற்போது ஸ்மார்ட் சிட்டிக்காக பணி யாற்றுவதற்கு இந்த தண்ணீர் இடை யூறாக இருப்பதால் குளத்தின் கரையை வெட்டி தண்ணீரை வெளி யேற்ற முயற்சிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நொய்யல் ஆற்று பகுதியில் இருந்து பெரியகுளத்திற்கு வரும்  நீரை தடுத்து, புட்டுவீக்கி பகுதி யில் வாய்க்கால் வெட்டி நீரை விவ சாய தோட்டப்பகுதிக்குள் திருப்பி விட்டுள்ளனர். தற்போது குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவ தற்காக பிரிட்டிசார் கட்டிய மதகு பகுதிகளை வெட்டி விட்டு தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டனர். வெள்ளியன்று அதிகாலை  ஸ்மார்ட் சிட்டி பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் வந்து இதனை செய்துள்ள னர். இதனையறிந்து பொதுமக்கள் விரைந்து வந்து வெட்டிவிட்ட பகு தியை அடைத்தோம். இதனையடுத்து சனிக்கிழமையும் அதிகாலை வந்து கரையை உடைத்துக்கொண்டிருந் தனர்.

மேலும், மீன் பிடிப்பவர்கள் எங்க ளுக்கு தகவல் சொன்னவுடன் திரண்டு வந்தோம். அதற்குள் அந்த ஊழியர் கள் ஓடிவிட்டனர். எந்நேரமும் குளக் கரையில் அமர்ந்து காவல் காக்க முடி யுமா. எவ்வளவு அழகு படுத்தினா லும், குளத்தில் தண்ணீர் இருந் தால்தான் அழகு. ஏற்கனவே குளத்தின் ஒருபகுதி சுற்றளவை குறைத்துவிட்டார்கள். இப்போது தண்ணீரை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு சொட்டு நீரும் பாது காக்க வேண்டும் என விளம்பரத்தில் வந்து மக்களுக்கு அறிவுரை சொல்லும் முதல்வர்கள், அமைச்சர்கள் அழகு படுத்த நீராதாரத்தை சீரழிப்பதை தடுக்க வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பும். அ.ர.பாபு

;