tamilnadu

சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் மே 15ம் தேதி துவங்குகிறது

திருப்பூர், மே 7-திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூர்-அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஐகேஎப் வளாகத்தில் வரும் மே 15 ஆம் தேதி துவங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் ஏற்றுமதி செய்தனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் ரூ.ஒரு லட்சம் கோடி என்ற இலக்கோடு பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சர்வதேச பின்னலாடை கண்காட்சி அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருப்பூர்-அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஐகேஎப் வளாகத்தில் 46ஆவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும் மே 15 ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரைநடைபெறவுஙளளது. இதில் பல்வேறு நாடுகளைசேர்ந்த இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள்,வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ஆர்டர்களை பெற முடியும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். கண்காட்சியை, மத்திய கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் துவக்கி வைக்கிறார். இந்திய பின்னலாடை கண்காட்சி சங்க தலைவர் சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மாகு உட்பட பலர் பங்கேற்கின்றனர். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு தொழில் நகரங்களை சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்கின்றனர்.

;