tamilnadu

img

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் ஆய்வு

கோவை, ஜன.10- கோவை மாவட்டத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம் பாளையம் பகுதியில் வீடுகளிலிருந்து சேகரிக்கும் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கும் நுண்ணுயிர் உரம் மையத்தின் செயல்பாடுகள் வெள்ளியன்று மாநக ராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதன் பின்னர் துடி யலூர் வாரச்சந்தை பகுதியில் நுண்ணுயிர் உரம் தயா ரிக்கும் மையத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெறு வதையும், வளர்மதி நகர் துடியலூரிலும், தெற்கு மண்ட லம் சுப்பிரமணியபுரம், ஏ.எஸ்.திட்டசாலை ஆகிய மையங்களில் பணிகள் முடிவுற்று விரைவில் ஆரம்பிக் கப்படுவதற்கான ஆயத்த பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து  முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்கள்.      இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் செந்தில்குமார் ரத்தினம், ஏ.ஜே.செந்தில் அரசன், உதவி  செயற்பொறியளர் ஜான்சன், மண்டல சுகாதார அலு வலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;