tamilnadu

கோவையில் கொரோனா தொற்று உறுதி அதிகரிப்பு

கோவை, ஜூன் 11 -   சிறுமி உள்ளிட்ட 6 பேருக்கு கோவையில் வியாழ னன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 10 வயது சிறுமி உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அவரது குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர்க ளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி உட் பட உடன் வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சென்னையில் இருந்து கோவை வந்த பயணியிடம் தொடர்பில் இருந்த வடவள்ளி பகு தியை சேர்ந்த 39 மற்றும் 29 வயதான இரு பெண்க ளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதே போன்று விழுப்புரத்தில் இருந்து கோவை வந்த பய ணியிடம் தொடர்பில் இருந்த ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 37 வயதான பெண்ணிற்கும் கொரோனா உறு தியானது. சென்னையில் இருந்து சாலை மர்க்கமாக கோவை வந்த கணவரிடம் இருந்து 32 வயது மனை விக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைய டுத்து 4 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.