tamilnadu

img

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்துக

சிஐடியு பிரச்சாரப் பயணம்

அவிநாசி, நவ.19- எம்.எஸ்.சுவாமிநாதன் குழு  பரிந்துரையை அமல்படுத்த  வலியுறுத்தி சிஐடியு சார்பில் அவிநாசி மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. விவசாயிகளைப் பாதுகாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை பாது காக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும். அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதி யம் ரூ.21 ஆயிரத்தை அமல் படுத்த வேண்டும்.  55 வயதான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  சேலம் உருக்காலை, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை  தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பல்வேறு இடங் களில் பிரச்சார பயணம் நடை பெற்றது. அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருமுருகன்பூண்டி, கருணை பாளையம், வஞ்சி பாளையம் ஆகிய பகுதிகளில்  நடைபெற்ற பிரச்சார இயக்கத் தில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர்  கே.ரங்கராஜ், விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.முத்துச்சாமி, அவிநாசி பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ஈஸ்வர மூர்த்தி, பி.ஆர்.கணேசன், வெங்க டாச்சலம்,  ஒன்றிய செயலாளர் பி.கனகராஜ், பனியன் தொழி லாளர் சங்க ஏரியா கமிட்டி செய லாளர் ஏ.சண்முகம், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட் டத் துணை தலைவர் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மேலும், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ், உள் ளாட்சி ஊழியர்கள் சங்கம் கே. வையாபுரி, விசைத்தறி சங்கத் தின் மாவட்ட குழு உறுப்பினர் கள் பி.முத்துராயப்பன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்

தாராபுரத்தில் தினசரி மார்க் கெட்டில் துவங்கி பூக்கடை கார் னர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் நடைபெற்றது. இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், சிஐடியு நிர்வாகிகள்  பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்று, மாநாட்டின் நோக்கங் களை விளக்கிப் பேசினர்.
 

;