புதுதில்லி:
தில்லி தனியார் மருத்துவமனைகள் கொரோனாசிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்என்று மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் நியமிக்கப்பட்ட நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான இந்த குழு கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டண விகிதங்களை அரசிடம் அளித்துள்ளது.இதன்படி தனிமைப்படுத்தப் பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுவோரிடம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை வசூலிக்கலாம். அவசர சிகிச்சை பிரிவுக்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 வரையும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18ஆயிரம் வரையும் வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள் ளது. தில்லியில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைக்கு ரூ.24 ஆயிரம் முதல்ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதைப்போல அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு முறையே ரூ.34 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரையும், ரூ.44 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது.