tamilnadu

img

நோய் தடுப்பு குழு அமைப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, அக்.1- தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு குழு  அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.  தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மரு.கே.குழந்தைசாமி  முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசிய தாவது, தருமபுரியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவ தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள் ளது. தருமபுரி மாவட்ட மக்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வரு வதாலும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. தரும புரி நகராட்சி மற்றும் 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் குளோரின் கலந்து குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. மேலும் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குப்பைகள் தேங்காதவாறு அவற்றை அகற்றவும் பிளிச்சிங் பவுடர் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு கிராமப்புறங்களில் போலி மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையை உடனடியாக அணுகி சிகிச்சை பெறவேண்டும். மேலும் போலி மருத்துவர்கள் யாரேனும் சிகிச்சை அளிப்பது  கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் வட்டார அளவில் மருத்துவ அலுவ லர்கள் தலைமையில்  30 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழு 8 வட்டாரங்களில் 250 பேர்  கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. 380 மஸ்தூர்கள் கொசு புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி  குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து மற்றும் மாத்திரைகள் இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் துணை இயக்குநர் மரு.ஜெகதீஸ் குமார், இணை இயக்குநர் மரு.மணிமேகலை, தலைமை  பூச்சி நிபுணர் மரு.ராணி, வட்டார மருத்துவ அலுவ லர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

;