tamilnadu

நாமக்கல் அருகே பலத்த காற்றுடன் கனமழை

நாமக்கல், ஏப். 21-பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயிலின்தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் விடாதுகனமழை பெய்தது. இந்த பலத்த காற்றினால் பொத்தனூரைச் சேர்ந்த வாழை விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழைத் தார்கள், வாழை மரங்கள் மற்றும் பிஞ்சு வாழைத் தார்களுடன் கூடிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்தன. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

;