தருமபுரி, அக்.30- மருத்துவர்களின் காலவரை யற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் புதனன்று 6 ஆவது நாளாக தொடர்ந்தது. மத்திய அரசு மருத்துவர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளி களின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத் துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்தப் போராட்டம் புதனன்று 6ஆவது நாளாக தொடர்ந்தது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி அரசு மருத்துவமனையில் நடை பெற்ற வேலைநிறுத்த போராட்ட விளக்க கூட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் மருத்துவர்கள் சீனி வாசன், கெளரிசங்கர், வெங்கட டேஷ், அபினேஷ், ஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக் கோடு வட்டார தலைமை மருத்துவ மனை மற்றும் 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய வற்றில் பணியாற்றும் 90 சத விகிதமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்
இதேபோல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
நாமக்கல்
இதேபோல் நாமக்கல் மாவட் டத்தில் உள்ள நாமக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை, இஎஸ்ஐ மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 400 அரசு மருத்துவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நாமக்கல் மாவட்ட அனைத்து அரசு மருத்து வர்கள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்களான மருத்து வர்கள் மு.லீலாதரன், பெ.ரங்க நாதன், ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேநேரம், பொதுமக்கள் நலன் கருதி உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவுகளில் மட்டும் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.