tamilnadu

அரசு மானியத்தில் பட்டுப்புழு வளர்த்து லாபம் பெறுக விவசாயிகளுக்கு பட்டுவளர்ச்சித்துறை அழைப்பு

பொள்ளாச்சி, ஜூன் 15- பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அரசு மாணியத்தில் பட்டுப்புழு வளர்த்து, அதிக லாபம் பெற பட்டு வளர்ச்சி துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து பட்டுவளர்ச்சித் துறை அதி காரிகள் கூறுகையில் ;-கோவை மாவட் டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவி லான தென்னை சாகுபடி செய்து வருகின்ற னர். குறிப்பாக தென்னந்தோப்பு பகுதிகளி லேயே சிறிதளவு இடம் இருந்தாலே கொட்டகை அமைத்து பட்டுப்புழுக்கள் வளர்த்து, அதற்கு முக்கிய உணவான மல் பெரி சாகுபடியும் செய்யலாம். இதில் குறை வான ஆட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் அதிகளவு வருமானம் பெருக்க முடி யும். இந்நிலையில் பட்டுப்புழு வளர்ப்பை ஊக்குவிக்க தமிழக பட்டுவளர்ச்சித் துறை விவசாயிகளுக்கு பல்வேறு மானிய உதவி களை செய்து வருகிறது.   இந்நிலையில் பட்டுப்புழுக்கள் உண வான, மல்பெரி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்து 500 நடவு மானியமாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டிற்காக பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகு திக்கு மொத்தம், நூறு ஏக்கர் இலக்கு பெறப் பட்டுள்ளது. அதேபோல் 800 முதல் 1000 சதுர அடிக்கு கொட்டகை அமைக்க ரூ. 63 ஆயிரமும், 1500 சதுரடிக்கு ரூ.82 ஆயிரத்து 500லிருந்து, ரூ.87 ஆயிரத்து 500 வரை மானி யமாக வழங்கப்படுகிறது.  இதனுடன் ரூ. 52 ஆயிரத்து 500 மதிப் புள்ள பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படும் வலைகள், மல்பெரியில் களைகள் அகற் றும் கருவிகள், அறுவடைக்குபின் பட்டுப் புழு கொட்டகை சுத்தம் செய்யும் மின் மோட் டார் கருவிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும், ஆமணக்கு உணவாக கொடுத்து ‘ஈரி’ பட்டுப்புழு வளர்க்கப்படு கிறது.

இவ்வகை பட்டுப்புழு வளர்க்க பழங்குடியினருக்கு ரூ. 15 ஆயிரத்து 300 அரசு மானியமாக  வழங்கப்படும்.  குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, பொள்ளாச்சி கிணத்துக்கடவு , ஆனைமலை, பகுதி விவசா யிகள் அந்தந்த வேளாண் அலுவலகத்திலோ அல்லது பொள்ளாச்சியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து, அரசு மானியத்தில் பட்டுப்புழு வளர்க்கலாம்.    இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு  பட்டுவளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித் தார்.

;