tamilnadu

img

நிலத்தை அபகரித்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்

தருமபுரி, ஜூன் 18- தருமபுரி அருகே நிலத்தை அப கரித்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், பெரியூர் காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இந்நிலையில் அதே கிரா மத்தைச் சேர்ந்த சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்த சாமி வசிக்கும் வீடு, மாட்டு பண் ணையை காலிசெய்யுமாறு கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி தாக்கி யுள்ளனர். மேலும், அவரது வீட்டை யும், மாட்டு பண்ணையும் தீ வைத் ததுடன் பண்ணையில் இருந்த  70 மாடுகளையும் கொள்ளைய டித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தசாமி, பாப்பாரப்பட்டி காவல்நிலையத் தில் புகார் அளித்த நிலையில், மேற்படி கட்டப்பஞ்சாயத்து கும் பல் இனிமேல் எந்த பிரச்சனை யும் செய்யமாட்டோம் என காவல் துறையிடம் வாக்குறுதி கொடுத்த தின் அடிப்படையில் கோவிந்தசாமி வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்நிலையில், வழக்கை வாபஸ் பெற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடியாட்களுடன் கோவிந்தசாமிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அபகரித்து கொண்டு அவரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த கோவிந்தசாமி தனது குடும்பத்துடன் ஒகேனக்கல் அருகே குடிசை அமைத்து வசித்து வருகிறார். இச்சூழலில் கட்டப்பஞ்சாயத்து கும்பலானது இவரை சொந்த ஊருக்கு வருவதற்கு தடை விதித் துள்ளதால் உறவினர்களில் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்க முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. இத னால் தனது குழந்தைகளைகூட படிக்க வைக்க முடியாத நிலை இருப்பதால், எனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை மீட்டு என் னிடம் ஒப்படைக்க வழிவகை செய்யவேண்டும். மேலும், தனது நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர் கள் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுத்து என் சொந்த கிரா மத்திலேயே தங்கி வாழ நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் வந்து தருமபுரி மாவட்ட  ஆட்சியர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளார்.